Sunday, 4 March 2012

அறநெறி - MORALITY

அறநெறி
ஆசிரியர்: சி.பாஸ்டின்
தேதி:4.3.12
முன்னுரை
சமுதாயம் என்பது தனிநபரையோ அல்;லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ குறிப்பிடுவதல்ல மாறாக ஒட்டுமொத்த மனித இனத்தையும், சமூகத்தையும் உள்ளடக்கியது.இந்த சமூகத்தில் மதிப்புடன் வாழ நமக்கு மதிப்புகள் தேவைப்படுகின்றன. இத்தகைய மதிப்புகள் நம்மை பிற மனிதரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. மதிப்புகள் அனைத்தும் மனிதரை பக்குவப்படுத்தி அவர்களை பண்படுத்துகிறது. மனிதரின் பண்பட்ட நிலையே மதிப்புகளாகும். எவ்வாறு ஒரு நிலத்தை பண்படுத்தி, பக்கவப்படுத்துகிறார்களோ அதே போல் மனிதருக்குள் மனிதத்தைக் கண்டறிய இத்தகைய மதிப்புகள் உதவிபுரிகின்றன. இத்தகைய மதிப்புகள் பற்றி பலர் கூறினாலும் இந்த ஆய்வுக்கட்டுரையில் ' வாழ்வில் வளம் பெற' என்ற புத்தகத்தில் முனைவர். ச. இன்னாசிமுத்து கூறும் மதிப்புகளையும் , அறநெறிகளையும், வகுப்பறையில் நான் கற்றுக் கொண்ட அறநெறிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.
 இந்த ஆய்வுக்கட்டுரை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.முதல் பகுதி இன்னாசிமுத்து அவர்களின் அறநெறி பார்வையும்,இரண்டாம் பகுதி வகுப்பில்நான்கற்றுக்கொண்ட அறநெறியும்,மூன்றாம் பகுதி வாழ்க்கைகாக நான் கற்றுகொண்ட அறநெறிகளையும்குறிப்பிட்டுள்ளேன்.


அலகு 1
ஆசிரியரின் அறநெறிச் சிந்தனைகள்


    1.1. மதிப்புகள்:
வாலாரே என்னும் இலத்த{ன் மொழியிலிருந்து உருவாகி மதிப்பு என்று பொருள்படுகின்றது    .
'மதிப்புகள் என்பது செயல்படுத்துவதற்குரிய கொள்கைகளைக் குறிக்கும், அல்லது நடத்தை வரம்புகளை உணர்த்தும்.' அவை நம்மை அறநெறிகளில் வலிமைமிக்கவர்களாகவும், வாழ்க்கை இலட்சியங்களை தேடும்மாறும் தூண்டுகின்றன. மனிதன் தனி ஆள் அல்ல, மாறாக ஒரு சமூகத்தின் உறுப்பினர். இவர்களுக்கு முறையான பயிற்சியும், நெறிமுறைகளும் அவசியமாகும். இந்நெறி முறைகளும் பயிற்சிகளும் அவர்களது வாழ்வுக்கு தேவையான நடத்தை வரம்புகளையும், கொள்கைகளையும் கற்றுத் தருகிறது. இதைத்தான் ஆசிரியர், பழகியல் மதிப்புகள் என்ற பிரிவில் குழந்தைப்பருவத்தில் பெற்றோர்கள் மற்றும் சுற்றத்தாரிடமிருந்தும், மாணவப் பருவத்தில், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் நடத்தை வரம்புகளை ஒருவன் கற்றுக் கொள்கிறான்.
மதிப்புகள் நமது வாழ்வின் நடுநாயகமாக செயல்பட்டு நமது பொறுப்புகள், செயல்கள் ஆகிய அனைத்தையும் ச{ர்படுத்துகின்றன.
1.2. தனிமனித மதிப்புகள்
    தனிமனிதனால் விரும்பி ஏற்கின்ற எந்த ஒரு மதிப்பும் தனிமனித மதிப்பு ஆகும். மதிப்புகளால் உந்தப் பெற்று, ஈடுபாடு கொண்டு தனது வாழ்வின் வெற்றிக்கான வழியை, அணுகுமுறைகளை த{ர்மானிக்கிறார். தனிமனிதன் இலட்சியங்களில் வளருகின்ற போது, சமூகம் வளர்ச்சியில் பரிணமிக்கிறது. இதனால் தான் பாரதியார், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்றார். தனிமனிதன் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவனோ, அந்த அளவுக்கு அவனுக்கு மதிப்புகளும் முக்கியமாகும்.;.
    தனிமனித மதிப்புகள் நம்மை சமூதாயத்தில் பொறுப்புணர்ச்சிக் கொண்டு வாழ உதவுகிறது.
1.2.1. துணிச்சல்
    மனித வாழ்க்கை சிக்கல்களும், சவால்களும் நிறைந்தது. மாறிவரும் ச10ழலில் நம் இடர்பாடுகளையும், பின்னடைவுகளையும் வ{ரத்துடன் எதிர்கொள்ளும் திறனே துணிச்சல் எனப்படும. தினசரி மனித வாழ்வில் எண்ணற்ற புதிய புதிய நோய்கள்; தாக்குவதைப் போன்று, உளவியல் ரீதியிலான புதிய புதிய சிக்கல்களும் உருவாகிக் கொண்டே வருகிறது. இதனை ஒரேயடியாக தள்ளி விடவும் முடியாது, புறக்கணித்து விடவும் முடியாது. இதில் பலவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலில் தான் இருக்கிறது. இச்சிக்கலை எதிர்க் கொள்ள வேண்டுமெனில் துணிச்சல் நமக்கு அவசியமாகிறது. 'இது உள்ளார்ந்த அளவில் இயக்காற்றலுடையது. நாம் எதிர்கொண்ட கொள்கைக்காகவும், மதிப்புகளுக்காகவும் போராடுமாறு ம்மை ஈடுபடுத்துகிறது.'
    இப்பண்பு வாழ்வின் நெருக்கடியான கட்டங்களிலும், தோல்விகளிலும் நம்பிக்கையோடு முன்னோக்கிப் பயணிக்க உதவுகிறது. நமது துன்ப வேளைகளில நமக்கு தன்நம்பிக்கை தந்து அவற்றை சமாலிப்பதற்க்கு திறனை தருகிறது.

1.2.2 கூர்ந்துணர்தல்:
ஆய்வறிவு என்பது நன்கு தீர்மானிக்கும் திறனை உணர்த்துகிறது. இது நன்மைக்கும் , த{மைக்கும் இடையிலான வேறுபாடுகளை ஆய்ந்து தெளிய உதவுகிறது. இது மனத்தின் செயல்முறையாகவும் விளங்குகிறது. சமுதாயத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து நடுநிலையாக முடிவெடுக்க உதவும் கருவிதான் கூர்ந்துணர்தல். அண்ணல் காந்தியடிகளுக்கு இரயிலில் ஏற்பட்ட அந்த கூர்வுணர்வுதான் நம் நாட்டின் தேசப்பிதாவாக மாற்றியிருக்கிறது. இது ஒருமைப்பாடு , உண்மை, நேர்மை, திறந்த மனமுடைமை ஆகிய மதிப்புகளைக் கடைபிடிக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. பார்வை உள்ளவர்களை விடப் பார்வை இழந்தவர்கள் ஆய்வு அறிவை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு ஆசிரியர் பார்வையற்ற ஹெலன் கெல்லர் காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பூவின் வாசம் மூலம் அதன் அழகை உணர்ந்ததாக ஆசிரியர் கூறுகின்றார்.
1.3. சமூக மதிப்புகள்:
இவை பிறரை சார்ந்த மதிப்புகளாகும். பிறரோடு நாம் கொண்டுள்ள ஈடுபாடு, கூட்டுவாழ்வு, போன்றவை சமூக மதிப்புகளுக்கு அடித்தளமாக உள்ளது.இது சமுதாயம், அடுத்திருப்பவர் , உலகம் ஆகிய உறவுத் தெடர்பு வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. சமூக மதிப்பு பற்றி ஆசிரியர் பல வழிகளில் அலசியிருந்தாலும் எனக்கு முதன்மையாகப்பட்ட மதிப்புகள் கடமை உணர்வு,மற்றும் பெருந்தகமை.
1.3.1 கடைமை உணர்வு:
மனச்சான்றின் படி பல்வேறு பணிகளை செய்வதே கடமையுணர்வு என்கிறோம். இது ஒரவரது உடல்நலத்தையும், வாழ்க்கையினையும் கூடத் தியாகம் செய்யுமாறு உந்துகிறது. இது சுய அறிவுறுத்தலால் மனம் செயல்படுவதால் நாம் செய்கின்ற பணியிலே முழு நிறைவை காண முடிகிறது. இது சமுதாயத்தில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.  எடுத்துக்காட்டாக , அரசு அதிகாரி தனது பணியை கடமையுணர்வுடன் செயல்பட்டால் நம் நாட்டில் ஊழல் போன்ற சமூக த{மையை அழித்துவிடலாம்.ஒருவர் தனது பணியை முழு அர்ப்பனத்துடன் செயல்படும் போது தனக்குள்ளே மனநிறைவும் , தன்னைப்பற்றிய நேர்மறையான எண்ணங்களும் எழ உதவுகின்றது.
1.3.2 பெருந்தகைமை:
மகத்ததான அறிவும் இதயமும் பெற்ற ஒருவர், வலியச்சென்று பிறருக்கு உதவும் நற்பண்பே  பெருந்தகைமை ஆகும். இது சமூகத்தில் நாம் பிறருடன் கொண்ட அன்பின் விளைவாக மனதிற்குள் உந்தப்படும் ஒரு உந்து சக்தியே  பெருந்தகமை எனப்படும். இது ஒருவரது உள்ளம் மற்றும் உணர்வுப்பூர்வமான தேவைகளை உணரச்செய்து, உணர்விற்கு முக்கியத்;துவம் அளித்து அவரின் தேவைகளை தன்னார்வத்துடன் நிறைவேற்ற உதவுகிறது. ஆகவே நமது ஆற்றல், திறமைகள், சுய தியாக உணர்வு ஆகியவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது. பிறருடைய துன்பத்தில் உணர்வுப்பூர்வமாக பங்கு கொள்ள உதவுகிறது.

1.4 அறநெறி மற்றும் ஆன்ம{க மதிப்புகள்:
இது தனி நபர் ஒருவரது நடத்தையுடனும் , ஆளுமையுடனும் தொடர்புடையது. அறநெறி மற்றும் ஆன்ம{க மதிப்புகள ஒருவரது சுயக்கட்டுப்பாடு, சுய சுத்திகரிப்பு அறிவு ஆகியற்றை வெளிப்படுத்துகிறது.அறநெறி மதிப்புகள் ஒருவரது சொந்த ஆன்ம{க மதிப்புகளை பொறுத்து அமையும்.ஏனெனில் அறநெறியும் ஆன்ம{கமும் ஒரே நோக்கத்திற்காக செயல்படுகின்றன. இவை இரண்டும் மனிதனை நல்ல மதிப்புகளால் பண்படையச் செய்ய உதவுகின்றன. ஆன்ம{கம் என்பது வெறும் சடங்கல்ல மாறாக முழு மனித விடுதலையை  அடிப்படையாக கொண்டது.
1.4.1 மாறா மனமுடைமை:
ஒருவர் தனது சுற்றத்தாரிடமும், மற்றவரிடமும் மாறாத நம்பிக்கை வைத்திருப்பதே மறா மனமுடைமை ஆகும். மனித தொடர்புக்கு மட்டும் அல்ல மாறாக வாழ்க்கை மதிப்புகள், உன்னதமானவைகள், உயர்வான காரணிகள் அனைத்திற்கும்  மாறாமனமுடைமை பண்பு முக்கியமானது.  கொள்கையின் அடிப்படையில்  சிலர் சூழ்நிpலைக்கேற்ப தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டே இருப்பர். இதனால்   வாழ்க்கையில் கொள்கை பிடிப்பற்றவர்களாய் சூழ்நிலைக் கைதிகளாய் செயல்படாமல் ஒரு குறிப்பிட்;ட விpடுதலை கூறுகளை அடிப்படையாகக் கொண்டு இறுதிவரை மனம் தளராமல் அதிக ஈடுபாடு காண்பது.
1.4.2 தூய்;மை:
மனத்தால் மாசற்றவராக இருப்பதும், பிறருக்கு சிறுதுளிக்கூட த{யதை எண்ணாததுமாகிய பண்பே தூய்மை எனப்படும் இது அன்பின் உள்ளார்நத மன உணர்வாக விளங்குகிறது. இறைவனது புனிதத்தன்மையில் இருப்பதன் பிரதிபலிப்பாக விளங்குகிறது.இங்கு சுட்டிக்காட்டப்படும் தூய்மை உடல் தூய்மையை மட்டும்;;; குறிப்பதல்ல மாறாக மனத்தூய்மையையும் குறிக்கிறது.இது நாம் பிறரிடம் கொண்டுள்ள உறவின் வெளிப்பாடாக விளங்குகிறது.நமது சொல், செயல் ,எண்ணம் ஆகியயவற்றை நேர்மறை செயல்களாகவும் , சமூதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் ஒருங்கிணைக்கும் சக்தியே தூய்மை ஆகும்.
அலகு-2
வகுப்பறையில்  நான் கற்றுக்கொண்ட அறநெறி

2.1 அறநெறி விளக்கம்:
அறநெறி என்பது நமது திறமைகளையும் ஆற்றல்களையும் பன்முகப்படுத்தி, இந்த பன்முகத் தன்மையெல்லாம் ஒருங்கிணைத்து தனிமனித, சமூக மாண்பையும் , இறையாண்மையையும் பரிணமிக்கச்செய்து பாதுகாக்கச் செய்யும் இயக்கச் சக்தியே அறநெறி எனப்படும்' என்று என்றிக் டசில் கூறுகின்றார்.
 ' அறநெறி என்பது வெறும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறையல்ல மாறாக ஒரு தொலைநோக்கு பார்வை' என்று பேர்னார்டு ஹேரிpயங் கூறுகின்றாhர்.

'அறவாழ்வு என்பது கடவுள்  மனிதருக்கு தரும் அழைப்பிற்கான பதில்' என்று இரண்டாம் ஜான்பால் கூறுகின்றார்.
2.2 அறநெறி கோட்பாடு:
2.2.1 இறைமைக் கோட்பாடு:
  இந்த இறைமைக் கோட்பாட்டில் எதற்காகச் செய்கின்றோம் என்பதை விட, எதை செய்கிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இறைமைக் கோட்பாட்டில் அனைத்தும் மனிதனை அடிமைப்படுத்;துகிறதா, விடுதலைப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுப்படுகிறது.
2.2.2 சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு:
சமூகத்தில் இருகுழுக்களிடையே பின்பற்றப்படும் சட்டத்திட்ங்களே அறநெறி ஆகும்.  இந்த ஒப்பந்தங்கள் ஒருசில வேளைகளில் பாதகமாகவோ, சாதகமாகவோ, அடிமைபபடுத்துவதாகவோ அல்லது விடுவிப்பதாகவோ இருக்கலாம். இந்த ஒப்பந்தங்கள் பொதுமை அறநெறிக்கு வழிவகுக்க வேண்டும்.

2.2.3 உயிரித்தொடர்பு கோட்பாடு:
 தனிமனிதர் தனது கடப்புச் சக்தியையும், விடுதலைத்தாகம் கொண்ட இறைமையை உணரும் போது எந்த சமூகத்திற்கும் பதில் தரக்கூடிய அறநெறிக் கூறுகள் வெளிப்படும் . இது மேற்கூறிய இரண்டு கோட்பாட்டிலுள்ள நிறைவை எடுத்துக் கொண்டு ஒரு ஆழமானத் தொடர்பை ஏற்படுத்தும்.
அறநெறியின் பன்முகங்கள்:
2.3.1 அறநெறி ஒரு சட்டம்:
  அறநெறி என்பது பெற்றோர், பெரியோர் , அரசு அதிகாரிகளால் கொடுக்கப்படும் சட்டத்தை கடைபிடிப்பது. ஏன், எதற்கு என்ற கேள்விக்கு இடமில்லை. இங்கு சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. அதிகாரிகள் சட்டத்திற்காக விளக்கம் தருகின்றனர். இதன் மூலம் க{ழ்படிதலை எதிர்பார்கின்றனர்.
2.3.2 அறநெறி என்பது உள்ள உறுதிப்பாடு:
  அறநெறி என்பது வெளியிலிருந்து உணரப்படுவதல்ல மாறாக உள்ளிருந்து உணரப்படுவது. சட்டம் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்வாங்கப்படுகின்றன. இங்கு மனச்சான்று முக்கியத்துவம் பெறுகிறது. சட்டம் , க{ழ்படிதல் என்ற நிலையை கடந்து மதிப்ப{டுகள் உள்வாங்கப்பட்டு உள்ள உறுதிப்பாடுடன் செயல்படுத்தப்படுகின்றன.

2.3.3 அறநெறி என்பது அன்பாக இருத்தல்:
உறவு மனித வாழ்வின் அச்சாரம். அறநெறி என்பது அன்பு உறவைக்குறிக்கும். மானிட தோழமைக்கு எது அழைத்துச்செல்கிறதோ, எது பிறரிடமிருந்து தனிமைப்படுத்துகிறதோ அதை அறமாகவும், மற்றதை அறமற்றதாகவும் அமையும்.
2.3.4 அறநெறி என்பது சமூக மாற்றம்:
மனிதர் தனக்குள்ளாக நடுநிலையை வகுக்க முடியாத நிலை ஜென்ம பாவம். நடுநிலை இல்லாததால் அடக்குமுறை சமூகமாக மாறுகிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு பதில் கொடுப்பதே அறநெறி ஆகும். உதவி செய்வதுமட்டும் அறநெறி அல்ல மாறாக அந{த அமைப்பை கேள்விக்கு உட்படுத்தி சமூகமாற்றத்தை உருவாக்குவதே அறநெறி.

மதிப்புகள் என்பது தானாக நிலை;திருக்க கூடியது. இது எந்த ஒரு தனிநபரையோ அல்லது சூழ்நிலையையோ சார்ந்ததல்ல மாறாக எல்லா மதிப்புகளும் கடவுளிக் ம{ட்புத்திட்டத்திலிருந்து வருபவை. விடுதலை என்பதே கடவுள் தெரிந்து கொண்ட மதிப்புகளாகும். பழைய ஏற்பாட்டில் மோயிசன் வழியாக இஸ்ராயேல் மக்களை மீட்ட இறைவன் புதிய ஏற்பாட்டில் தனது ஒரே மகன் வழியாக அன்றைய சமூகத்தில் புரையோடிப்போன மூடநம்பிக்கை, பாவ வாழ்வு போன்றவற்றிலிருந்து அவர்களை மீட்டார்.
அலகு-3
வாழ்க்கைகாக நான் கற்றுகொண்ட அறநெறி
நான் கற்றுகொண்ட அறநெறி:
1)    அறநெறி என்பது நமது ஆக்கப்பூர்வமான சக்திகளை மக்களின் முழுவிடுதலைக்காக ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுவதே அறநெறி என்பதை கற்றுக்கொண்டேன்.
2)    இந்த அறநெறியானது என் மனதை பக்குவப்படுத்தி அன்றாட நிகழ்வுகளை ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தோடும், கூர் உணர்வோடும் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.
3)    அறநெறி வளர முதலில் எனது தனி மதிப்புகள், கமூக மதிப்புகள், அறநெறி மற்றும் ஆன்மீக மதிப்புகளை நான் வளர்த்துக்கொள்ள இப்பாடம் உதவி புரிந்தது.
4)    மதிப்புகள் என்பது மாறா தன்மைக் கொண்டது. ஏனென்றால் இந்த மதிப்புகள் என்றும் மாறாத தன்மைகொண்ட கடவுளின் திட்டத்திலிருந்து வருகிறது.ஆகவே மதிப்புகளை ஒரு தனி நபரோ , ஓரு குறிப்பிட்ட சூழ்நிலையோ கட்டுப்படுத்த முடியாது.
5)    துன்பத்தில் தவிப்போரை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொண்டு அவரைக் கைத்தூக்கி விடவும் , நெருக்கடியான வேளையில் பிறரை புரிந்துகொண்டு இசைவான உணர்வை வெளிப்படுத்தவும் கற்றுக்கொண்டேன்.
6)    மற்றவர்களது மனநிலைகள், உணர்வுகள், செயல்கள் ஆகியவற்றை உணர்ந்து செயல்படவும் ஓர் இலட்சியத்திற்காகத்  தங்களை அர்பணித்துக் கொண்ட குழு உறுப்பினர்களுக்கும், சமுதாய பணிகளுக்கும் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற உணர்வை நான் கற்றுக் கொண்டேன்.
7)    மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுத்து நான் எனது நம்பிக்கையிலும், கொள்கையிலும் நிலைப்பேற்றினைக் கொண்டிருக்க வேண்டும் என்ற மன உறுதி எனக்குள் பிறந்துள்ளது.
8)    உலகப் படைப்பின் அற்புதங்களையும், அழகுகளையும் பற்றி அறிந்து இயற்க்கையைப் பேணிகாத்தல், மரம் வளர்ப்பு பற்றிய நன்மைகளை நான் செல்லும் களப்பணி மக்களுக்கு எடுத்துக்கூறுவேன்.
9)    எனது எண்ணம் , சொல், செயல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, நல்ல பணி, நல்ல சிந்தனை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு, என்னை எதிர்மறை உணர்வுகளுக்கு இட்டுச் செல்லும்வாய்ப்பினை அறவே ஒழித்து அவற்றை இயக்கச் சக்தியாக மாற்ற முயல்வேன்.
10)    எல்லா மனிதருக்கும் குறிப்பாக தேவையில் இருப்போருக்கு உதவி செய்து, 'எல்லாம் எனக்கே' என்னும் எதிர்மறை மனநிலையிலிருந்து விடுபட்டு 'எல்லாம் மக்களுக்காக' என்னும் பரந்துபட்ட மனநிலையை கொண்டு பணி செய்ய வேண்டும் என்;;பதைக் கற்றுக் கொண்டேன்.
முடிவுரை:
மேற்கூறியவற்றிலிருந்து, அறநெறி என்பது வெறும் பாலியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல மாறாக ஒட்டுமொத்த மனித வாழ்வையும் உள்ளடக்கியது என்பதை உணரமுடிந்தது. ஆகவே , அறநெறி என்பது ஒரு சட்டமோ அல்லது ஒரு கோட்பாடோ அல்ல மாறாக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய ஒரு நெறிமுறை. இத்தகைய வாழ்க்கை நெறி முறை மூலம் தனிமனித விடுதலை பெற்று, பின் சமூக விடுதலைக்கும் , சமூக மாற்றத்திற்கும் இட்டுச் செல்லும். ஆகவே , இந்த ஆய்வுக் கட்டுரையின் மூலம் பிறரையும் மனிதராக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகி மனித மாண்புகள் மதிக்கப்பட எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது.










1 comment:

  1. உங்கள் கட்டுரை நன்று எனக்கு ' வாழ்வில் வளம் பெற' என்ற புத்தகமும் முனைவர். ச. இன்னாசிமுத்து குறிப்பும் தேவைப்படுகிறது.

    ReplyDelete